Thursday 13 May 2010

மனிதம், கடவுளின் அற்புதப் படைப்பு - பாகம் 4

மனிதனுடைய உடல் வியாதியால் பாதிக்கப்பட்டால் அதற்கு தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டு , அவர் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ள வேண்டும் . இன்னொரு வியாதிக்கு கொடுக்கப்படும் மருந்தை வந்திருக்கும் வியாதிக்காக சாப்பிட்டால் , உடல் குணமாகுமா ? அதுபோலத் தான் மனிதனுடைய இதயமும் , மூளையும் அதனுடைய செயல்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது . இவை இரண்டும் அதனுடைய செயல்களை மாற்றிக் கொண்டு செயல்படுத்தினால் நிச்சயமாக அனர்த்தம் நிகழக்கூடும். மனிதனுடைய மூளையானது, இதயத்திலிருந்து உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் வடிகால் கொடுக்கிறது . இந்த மூளை, இதயத்திலிருந்து பிறக்கிற என்ணத்திற்கு வடிவம் கொடுத்து அதற்கு தனியொரு அடையாளத்தை கொடுக்கிறது . மனிதனின் மூளை , ஒவ்வொரு எண்ணத்தையும் ஈர்த்துக் கொண்டு , நன்றாக ஆராய்ந்து , சிந்தித்து அதனை செயலாக்கமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டது . இத்தகைய அபார சக்தியைக் கொண்ட மூளை மனிதனை ஒரு இயந்திரத்தை போல
இயங்க வைக்கிறது .

ஈர்ப்புத் தன்மையைக் கொண்ட மனிதனுடைய மூளை , இதயத்திலிருந்து பிறக்கிற அனைத்து எண்ணங்களையும் தனுக்குள்ளே அடக்கி வைத்துக் கொள்கிறது . இந்த மூளை தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் கிரகித்துக் கொண்டு , நல்லதையும் , நல்லது இல்லாததையும் வகைப்படுத்துகிறது . அப்படி வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு
எண்ணமும் இந்த பிரம்மாண்டத்தில் மைல்கணக்கு பயணம் செய்கிறது . பாதையில் பல இடையூறுகள் தோன்றினாலும் அதனை சமாளித்துக் கொண்டு , பயணத்தை நிறுத்தாமல் , எண்ணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ஒரு அதிர்வலையோடு மூளைக்கு திரும்புகிறது . ஒரு எண்ணத்தின் தொடக்கம் நோக்கத்தில் முடிவடைகிறது . எப்போது எண்ணம் பயணிக்க தொடங்குகிறதோ அப்பொழுதே அதனுடைய நோக்கமும் பயணிக்க தொடங்கி விடுகிறது . மனிதனுடைய மூளையிலிருந்து பயணிக்கிற ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு நோக்கத்தோடு தான் பயணிக்கிறது . எண்ணமும் நோக்கமும் இரண்டு தண்டவாளங்களை போல பயணிக்கிறது .

எண்ணத்தின் மூலம் மனிதனை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது . அவன் நல்லவனா , நம்பகமான மனிதனா என்று தெரிந்து கொள்கிறோம் . எண்ணத்திலிருந்து எழும்பும் நோக்கமானது ஒரு மனிதனை பற்றி முழுமையாக அறிய வைக்கிறது . நல்ல நோக்கத்தை கொண்டு பயணிக்கும் எண்ணமானது பலன்தரும் அதிர்வலையோடு பிறக்கிறது , நன்மை பயக்காத எண்ணமானது மாபெரும் அழிவை விளைவிக்கிறது . மனிதனுடைய மூளையானது ஒவ்வொரு எண்ணத்தினுடைய நோக்கத்தை ஒரு அதிர்வலையாக மாற்றி ஒரு சக்தியை படைக்கிறது . இந்த சக்தி பல அதிசயமான கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு கொடுத்திருக்கிறது . உதாரணத்திற்கு எடிசனின் மூளை மின்சாரத்தை கண்டுபிடித்து உலகத்தினுடைய இருளை அகற்றியது . தொலைக்காட்சிப்பெட்டி , கணணி , தொலைபேசி , கைபேசி , போன்ற பல நவீன கருவிகளை கண்டுபிடித்த மனிதனுடைய மூளையை அபார சக்தியென்று சொல்லலாம் . இத்தகைய
அபார சக்தியினால் விக்ஞானம் முன்னேற்றமடைந்து பல சாதனைகளை படைத்திருக்கிறது . நினைத்துப் பார்க்க முடியாத செயல்களையெல்லாம் செயலாக்கப்பட்டுள்ளது . எத்தனையோ அபூர்வங்கலை படைத்துள்ள மனிதனுடைய மூளை எப்போதும் சிந்தித்து கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருக்கிறது . இது மூளையின் இயற்கையான இயல்பாகும் . மனிதனின் வயது அதிகரிக்க அவனுடைய மூளை இடைவிடாது சிந்திப்பதால் காலப்போக்கில் சோர்வடைகிறது . இத்தகைய சூழ்நிலையில் மனிதனுடைய மூளை மெய்ஞானத்தை கைப்பற்றுகிறது , அவன் தியானத்தை கையாளுகிறான் .
இந்த மூளையானது மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்பாதியாக பிரிக்கிறது . இந்த மூளை , மனிதனுடைய வாழ்க்கையின் முதல் பாதியை
விக்ஞானத்தோடும் , கடைசி பாதியை மெய்ஞானத்தோடும் இணைப்பது மட்டுமில்லாமல், அந்தந்த காலகட்டத்தில் அவைகளின் பலன்களை அனுபவிக்க ஒரு அறிய வாய்ப்பைக் கொடுக்கிறது .

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்ற மனிதனுடைய மூளை சூழ்நிலையால்
உருவாகும் உணர்வுகளையும் அனுபவிக்கிறது . எல்லையில்லா
மகிழ்ச்சியால் மனிதனுடைய உணர்வுகள் பரவசமடைகிறது ,
தொடர்ந்து நிகழும் சோதனையால் அவனுடைய உணர்வுகள் வேதனையோடு வலிக்கிறது . ஆனால் எத்தகைய உணர்வையும் ஒரு கட்டுப்பாட்டோடு அனுபவித்தால் மனிதனுடைய மூளை தன்னுடைய சித்தத்தை இழக்காமல் ஒருநிலைப்படுத்தி செயல்படுகிறது . சித்தம் தவறிய மூளையானது இசகுபிசகாகவும் செயல்படலாம் , திடீரென்று செயலிழந்தும் போகலாம் . செயலிழந்த மூளை மனிதனுக்கு ஒரு அசைவற்ற நிலையைத் தருகிறது . அத்தகைய நிலை ஒரு மனிதனை நடைபிணமாக காட்டுகிறது .

மனிதனின் மூளை வயதுக்கு தகுந்தால் போல அவனை செயல்பட வைக்கிறது . பருவ காலத்தில் அவனை போட்டி போட்டுக் கொண்டு திறமையோடு படிக்க வைக்கிறது , இளமைக் காலத்தில் அவனை கடுமையாக உழைக்க வைத்து வருமானத்தை கொடுக்கிறது , முதுமைக் காலத்தில் அவனை அமைதியான பாதையில் பயணிக்க வைக்கிறது . இந்த மூளையானது அந்தந்த வயதில் செய்ய வேண்டிய செயல்களை மனிதனுக்கு எளிமையாக உணர்த்துகிறது . சிந்திக்கும் திறனும் , எண்ணங்களை வடிவமாக்கும் சக்தியைக் கொண்ட மனிதனுடைய மூளை கடவுளின் ஒரு அற்புதப் படைப்பு !!!!

No comments:

Post a Comment